கோலாலம்பூர், பிப் 12- உலகளவில் அதிக தொலைபேசி பயன்படுத்தும் நாடுகளின் பட்டியலில் மலேசியா மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.
அண்மையில், கனடாவிலுள்ள McGill பல்கலைக்கழகம் கிட்டதட்ட 34,000 பங்கேற்பாளர்களைக் கொண்டு மேற்கொண்ட ஆய்வின்படி, அதிகம் கைத்தொலைபேசிகளுக்கு அடிமையான நாடுகளின் பட்டியலில் முதலிடத்தை சீனாவும், இரண்டாம் இடத்தை சவுதி அரேபியாவும் பெற்றிருக்கும் நிலையில், மலேசியா முன்றாம் இடத்தைப் பெற்றது.
15 முதல் 35 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் மத்தியில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வு Science Direct எனும் ஆய்வேட்டில் பதிவிடப்பட்டது.
சமூக மற்றும் கலாச்சார எதிர்பார்ப்பின் காரணமாகவே, தொலைபேசி பயன்பாட்டில் நாடுகளுக்கிடையிலான வேற்றுமையைக் காணமுடிவதாக ஆய்வாளர்கள் கருத்துரைத்திருந்தனர்.