கோலாலம்பூர், மே 8 – ஸ்வீடிஷ் மருந்து தயாரிப்பு நிறுவனமான அஸ்ட்ரா ஜெனெகா, உலகளவில் தனது கோவிட்-19 தடுப்பூசியை, மீட்டுக் கொள்வதாக அறிவித்துள்ளது.
நேற்று தனது டெலிகிராப் செய்தி வாயிலாக அஸ்ட்ரா ஜெனெகா அந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அஸ்ட்ரா ஜெனெகா நிறுவனம், தானாக முன்வந்து அதன் “சந்தை அங்கீகாரத்தை” திரும்பப் பெற்ற பிறகு, அதன் தடுப்பூசியை இனி ஐரோப்பிய ஒன்றியத்தில் பயன்படுத்த முடியாது என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தனது தடுப்பூசியை திரும்பப் பெறுவதற்கான விண்ணப்பம் மார்ச் ஐந்தாம் தேதி செய்யப்பட்ட வேளை ; அது மே ஈழாம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளதாகவும் அஸ்ட்ரா ஜெனெகா நிறுவனம் கூறியுள்ளது.
அதே போல, வரும் மாதங்களில், வாக்ஸ்செவ்ரியா (Vaxzevria) எனப்படும் தனது தடுப்பூசி பயன்பாட்டுக்கு ஒப்புதல் அளித்திருக்கும் இங்கிலாந்து உட்பட இதர நாடுகளிலும் அந்த விண்ணப்பம் செய்யப்படுமென அஸ்ட்ரா ஜெனெகா கூறியுள்ளது.