Latestஉலகம்

உலகளவில் பனிப்பாறைகள் மிக வேகமாக உருகிவருகின்றன

பாரிஸ், ஏப்ரல் 29 – 2000ஆம்  ஆண்டு தொடங்கி,  உலகில் உள்ள  அனைத்து  பனிப்பாறைகளும்  சிறியதாகியிருப்பதாக, அனைத்துலக ஆராய்ச்சி குழுவினர் குறிப்பிட்டுள்ளனர்.

அவர்களது அந்த  ஆராய்ச்சியில் பனிப்பாறைகள் பெரும்பாலும் மிக வேகமாக  கரைந்து வரும் தகவல், அதிர்ச்சி தரும்  வகையில் அமைந்துள்ளது.

2000 –ஆம் ஆண்டு தொடங்கி, சராசரி 26,700 கோடி டன் அளவிலான பனிப்பாறைகள் உருகியிருப்பதாக கணக்கிட்டிருக்கும்,  அனைத்துலக குழுவினரின் அந்த ஆராய்ச்சி முடிவு,  Nature இதழில் , நேற்று வெளியிடப்பட்டது.

மேலும் அந்த ஆய்வில்,  உலகின் இதர பகுதிகளைக் காட்டிலும்,  ஆல்ப்ஸ் , ஐஸ்லாந்து ,  அலஸ்கா ஆகிய பகுதிகளிலே  பனிப்பாறைகள் மிக வேகமாக கரைந்து வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!