சோல், பிப் 18 – தென் கொரியா, ஆஸ்திரேலியா, ஹங்காங், சிங்கப்பூர் உட்பட உலகளாவிய நிலையில் பல நாடுகளில் கோவிட் தொற்று மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனால் பல நாடுகள் கோவிட் தொற்றுக்கு எதிரான கட்டுப்பாடுகளை அமல்படுத்துவதில் தொடர்ந்து தீவிரம் காட்டி வருகின்றன.
தென் கொரியாவில் மிக்ரோன் திரல் பரவிய பின் முதல் முறையாக ஒரே நாளில் 100,000 பேர் கோவிட் தொற்றுக்கு உள்ளானதாக அந்நாட்டின் தொற்று நோய் தடுப்பு பிரிவு நிறுவனத்தின் அதிகாரிகள் கூறினர்.
தற்போது இரவு 9 மணி முதல் இரவு 10 மணிவேரை வர்த்தகத்திற்கான ஊரடங்கில் சற்று தளர்வு ஏற்படுத்தப்பட்டது . இதுதவிர அனைத்துலக வருகையாளர்களுக்கான ஏழு நாள் தனித்திருக்கும் கட்டுப்பாடு , தனியார் நிகழ்வுகளில் 6 பேர் மட்டுமே பங்கேற்பது, பொது இடங்களில் கட்டாய முகக் கவசம் அணிவது போன்ற கட்டுப்பாடுகள் தொடர்ந்து அமல்படுத்தப்பட்டுள்ளது.