கீவ், மார்ச் 1 – உலகளாவிய நிலையில் ரஷ்ய விமானங்களுக்கும் கப்பல்களுக்கும் தடை விதிக்கும்படி உக்ரைய்ன் அதிபர் Volodymyr Zelensky கோரிக்கை விடுத்துள்ளார்.
தமது நாட்டிற்கு எதிராக படையெடுப்பு நடத்திய ரஷ்யாவை உலக நாடுகள் தண்டிப்பதுற்கு இதுவே சரியான பாடமாக இருக்கும் என அவர் வலியுறுத்தினார்.
போர் நிறுத்தம் தொடர்பாக பேச்சுக்களில் கலந்துகொள்ளச் சொல்லிவிட்டு உக்ரேய்ன் பிரதேசத்தில் மீண்டும் ரஷ்யா தாக்குதல் நடத்தியிருப்பதாகவும் அவர் குற்றஞ்சாடினார்.
உக்ரைய்னின் இரண்டாவது மிகப் பெரிய நகரான Kharkiv நகரில் ரஷ்யா நடத்திய தாக்குதலில் 11 பேர் உயிழந்ததாக தமது முகநூலில் Volodymyr Zelensky பதிவிட்டுள்ளார். ரஷ்யாவின் தாக்குதலில் இதுவரை 14 சிறார்கள் உட்பட பொதுமக்களில் 350 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் .