Latestஉலகம்

உலகின் அதிக வயதான ஜப்பானிய பெண்மணி 119-வது வயதில் காலமானார்

தொக்யோ, ஏப் 25 – ஜப்பானைச் சேர்ந்த உலகின் அதிக வயதான பெண்மணி தனது 119-வது வயதில் காலமானார்.
கானே தனாகா (Kane Tanaka) என்பவர் 1903-ஆம் ஆண்டு ஜனவரி இரண்டாம் தேதி Fukuoka பகுதியில் பிறந்தார். அவர் தனது இறுதி காலத்தை முதியோர் இல்லத்தில் கழித்து வந்தார். அங்கு அவர் சதுரங்கம் விளையாடுவது, கணக்கு புதிர்களுக்கு விடை காண்பது என மகிழ்ச்சியாக பொழுதை கழித்து வந்தார் .

2019 – இல் உலகின் அதிக வயதான பெண்மணியாக, கானே தனாகாவை கிண்ணஸ் உலக சாதனை புத்தகம் அங்கீகரித்தது. அப்போது உங்கள் வாழ்க்கையின் சந்தோஷமான தருணம் எதுவென கேட்டபோது, இப்போதுள்ள அந்த தருணமே என அந்த வயதான பெண்மணி கூறியிருந்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!