போட்ஸ்வானா, ஆகஸ்ட் -23 – உலகின் இரண்டாவது மிகப் பெரிய வைரம் ஆப்பிரிக்க நாடான போட்ஸ்வானாவில் (Botswana) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அந்த 2,492 கேரட் வைரத்தை கனடிய சுரங்க நிறுவனமான லூக்காரா டைமண்ட் (Lucara Diamond) கண்டுபிடித்தது.
Lucara நிறுவனத்தின் Mega Diamond Recovery X-ray தொழில்நுட்பத்தின் உதவியுடன் அவ்வைரம் கண்டெடுக்கப்பட்டது.
எனினும் அந்த வைரக் கல்லின் தரம் குறித்தோ மதிப்பு குறித்தோ எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
என்றாலும், அதன் மதிப்பு 4 கோடி டாலராக இருக்கலாமென, Lucara நிறுவனத்துக்கு நெருக்கமான தரப்பை மேற்கோள் காட்டி பிரிட்டனின் Financial Times பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
1905-ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட 3,106 கேரட்டிலான Cullinan வைரமே, உலகில் இதுவரை கண்டெடுக்கப்பட்ட மிகப் பெரிய வைரமாகும்.
உலகின் தங்கச் சுரங்கம் என அழைக்கப்படும் நாடுகளில் போட்ஸ்வானாவும் முக்கியமானதாகும்.
அந்நாட்டில் இதற்கு முன் 2019-ல் 1,758 கேரட்டிலான வைரம் கண்டுபிடிக்கப்பட்டதே பெரியதாக இருந்தது.