
ஒன்டாரியோ, செப்டம்பர் 9 – உலகின் இளம் வீடியோ கேம் மேம்பாட்டாளர் எனும் பெருமையை பெற்றுள்ளார் ஆறு வயது சிறுமி ஒருவர்.
சிமர் குரானா எனும் அந்த சிறுமி தனது முதல் வீடியோ கேமை உருவாக்கிய போது, அவருக்கு வெறும் ஆறு வயது 335 நாட்கள் மட்டுமே.
கனடா, ஒன்டாரியோவில் வசிக்கும் சிமர், வீடியோ கேமை உருவாக்க முதலில் கோடிங் எனப்படும் குறியீட்டை முறையாக பயில தொடங்கினார்.
எனினும், அவ்வளவு சிறிய பெண், கணினி நிரலாக்க உலகில் நுழைந்தது, மற்றவர்களை பிரமிப்பில் ஆழ்த்தியது.
சிமரின் தந்தை மனம் தளரவில்லை. அவருக்கு போதிக்க, பிரத்தியேக கோடிங் ஆசிரியர் ஒருவரை கண்டுபிடித்தார்.
கணித பாடத்தில் அதிக ஆர்வம் கொண்ட சிமர், யூட்யூப் வாயிலாக அதனை சுயமாக கற்றுக் கொண்டார். பாலர் பள்ளியில் படிக்கும் போதே அவரால், மூன்றாம் வகுப்பு கணிதங்களுக்கு தீர்வுக் காண முடிந்தது.
அதனால், கோடிங் உலகில் சிமரால் மிளிர முடியும் என்பதை உணர்ந்த அவரது தந்தை, அவருக்கு ஊக்கமூட்டினார்.
சிமர் உருவாக்கிய முதல் வீடியோ கேம், Healthy Food Challenge எனப்படும் ஆரோக்கிய உணவு சவால் விளையாட்டு.
நொறுக்குத் தீனி அல்லது துரித உணவு வகைகளை அதிகம் சாப்பிட வேண்டாம் என மருத்துவர் கூறியதை, வீடியோ கேமாக உருவாக்கியதாக கூறியுள்ளார் சிமர்.
கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த அவர், எதிர்காலத்தில் அதுபோல மேலும் பல சாதனைகளை புரியமும் இலக்கு கொண்டுள்ளார்.