
செப் 11 – உலகின் சிறந்த ரொட்டியாக மலேசியாவின் ‘ரொட்டி சானாய்’ தேர்வுப் பெற்றுள்ளது.
உலகெங்கிலும் பல்வேறான நாடுகளுக்குப் பயணம் செய்து பல்சுவை உணவுகளை ரசித்து, இதுவரை 10,000 உணவுகளை பட்டியலிட்டுள்ள ‘Tasteatlas’ எனும் அகப்பக்கம் மேற்கொண்ட ஆய்வில் இது தெரியவந்துள்ளது. இந்த முடிவை ‘Tasteatlas’ அதன் இன்ஸ்தாகிராமில் பதிவிட்டிருக்கிறது.
ரொட்டி வகை உணவுகளுக்குப் பெயர்ப்போன இந்தியா, ஐரோப்பா போன்ற நாடுகளைப் பின்னுக்குத் தள்ளி மலேசியாவின் ரொட்டி சானாய் முதல் இடத்தைப் பிடித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ரொட்டி சானாய்க்கு இதற்கு முன்னர் சிறந்த சாலை உணவு என்ற பட்டமும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
எந்நேரமாக இருந்தாலும், மலேசியர்களின் விருப்ப உணவான ரொட்டி சானாய்க்கு இது ஒரு அங்கீகாரம்தான்.