
பேங்கோக், செப் 10 – 2023-ஆம் ஆண்டுக்கான உலகின் 87 சிறந்த நாடுகளின் பட்டியலில்,
மலேசியா 38-வது இடத்தைப் பெற்றுள்ளது.
US News & World இந்தப் பட்டியலை வெளியிட்டுள்ளது. பல்வேறு அளவீடுகளின் அடிப்படையில், நாடுகளின் உலகளாவிய செயல்திறனை அடிப்படையாக கொண்டு அந்த தரநிலை மதிப்பிடப்பட்டுள்ளது.
பட்டியலில், சுவிட்சர்லாந்து முதல் இடத்தை பிடித்துள்ள வேளை ; கனடா, ஸ்வீடன், ஆஸ்திரேலியா, அமெரிக்கா, ஜப்பான், ஜெர்மனி, நியூசிலாந்து, யுனைடெட் கிங்டம் மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகள் முறையே அடுத்தடுத்த இடங்களை வகிக்கின்றன.
ஆசியான் நாடுகளில், சிங்கப்பூர் 16-வது இடத்திலும், தாய்லாந்து 29-வது இடத்திலும், இந்தோனேசியா 41-வது இடத்திலும், பிலிப்பைன்ஸ் 43-வது இடத்திலும், வியட்நாம் 44-வது இடத்திலும், கம்போடியா 64-வது இடத்திலும், மியன்மார் 80-வது இடத்திலும் உள்ளன.
ஈரான் ஆகக் கடைசியாக 87-வது இடத்தை பிடித்துள்ளது