Latestஇந்தியா

உலகின் மிகப் பிரபலத் தலைவர் இந்தியப் பிரதமர் மோடி – ஆய்வு முடிவு

செப் 16 – உலகின் மிகப் பிரபலத் தலைவராக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி விளங்குவதாக ‘Morning Consult’ நிறுவனத்தின் ஆய்வின் முடிவு காட்டியுள்ளது.

76 விழுக்காடு ஆதரவோடு அவர் முதல் நிலையைப் பிடித்துள்ள வேளையில் 12 விழுக்காடு புள்ளி வித்தியாசத்தில் அவருக்கு அடுத்து நிலையில் சுவிட்சலாந்து அதிபர்  அலைன் பெர்செட் (Alain Berset) உள்ளார்.

கடந்த சில ஆண்டுகளாகவே மோடி இப்பட்டியலில் முதல் நிலையில் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அண்மையில் G20 மாநாட்டை பல உலக நாடுகள் போற்றும் வகையில் இந்தியா ஏற்று நடத்தியது.

இது மோடிக்கு பன்னாட்டு தலைவர்கள் மத்தியில் பெரும் செல்வாக்கைக் கூட்டியுள்ளதோடு உலக விவகாரங்களில் இந்தியாவின் ஆளுமைத் தன்மையையும் வெளிப்படுத்துயுள்ளதாக கூறப்படுகிறது.

செப்டப்பர் 6 முதல் 12 வரை 22 உலகத் தலைவர்களை உட்படுத்தி மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில் கோடிக்கு 18 விழுக்காடு எதிர்ப்பு மட்டுமே உள்ளதாகவும் முடிவு காட்டியுள்ளது.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் 40 விழுக்காடு ஆதரவோடு இப்பட்டியலில் 7-வது இடத்தில் இருக்கிறார்.

கனடா பிரதமர் 10 இடத்திலும் தென் கொரிய மட்டும் செக் குடியரசின் அதிபர்கள் இறுதி நிலையிலும் உள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!