Latestஉலகம்

உலகின் மிகவும் வயதான பெண், 117 வயதில் காலமானார்

மாட்ரிட், ஆகஸ்ட் 21 – உலகின் மிகவும் வயதான பெண் மரியா பிரான்யாஸ் மொரேரா (Maria Branyas Morera) என்பவர் 117 வயதில் காலமானார்.

கடந்த 1907ஆம் ஆண்டு மார்ச் 4-ஆம் திகதி அமெரிக்காவில் பிறந்த மரியா பிரான்யாஸ், இரண்டு உலகப் போர்களைச் சந்தித்துடன், ஸ்பெயின் உள்நாட்டுப் போர், 1918ஆம் ஆண்டு ஏற்பட்ட காய்ச்சல் மற்றும் கோவிட் தொற்று ஆகியவற்றை பார்த்தவருமாவார்.

கடந்தாண்டு பிரான்ஸ் நாட்டைச்சேர்ந்த நன்லுசிலி ரான்டான் (Lucile Randon) என்பவர் 118 வயதில் இறந்தார்.

இதையடுத்து அவருக்கு அடுத்தபடியாக மரியா பிரான்யாஸ் மொரேரா (Maria Branyas Morera) உலகின் மிகவும் வயதான பெண் என 2023 ஜனவரியில் அறிவிக்கப்பட்டு கின்னஸில் இடம் பிடித்தார்.

இந்நிலையில், நேற்று மரியா பிரான்யாஸ் மொரேரோ காலமானதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.

மரியா பிரான்ஸியாஸின் மரணத்தைத் தொடர்ந்து, உலகின் மிக வயதான நபர் ஜப்பானைச் சேர்ந்த டோமிகா இடூகோ (Tomiko Itooka) என்ற பெண்மணி இருப்பார் என்று தெரிகிறது.

1908ஆம் ஆண்டு மே மாதம் பிறந்தவருக்கு, தற்போது 116 வயது ஆவதாக ஜெரண்டாலஜி (Gerontologi) ஆராய்ச்சி குழு கூறியுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!