
கோலாலம்பூர், மார்ச் 17 – அகில இங்கிலாந்து பூப்பந்து போட்டியின் நடப்பு வெற்றியாளரும், உலகின் முதல் நிலை ஆட்டக்காரருமான டென்மார்க்கின் Viktor Axelsen – னை வீழ்த்தி , மிகப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றார் நாட்டின் ஒற்றையர் விளையாட்டாளரான Ng Tze Yong.
பிர்மிங்ஹாமில் நடைபெறும் போட்டியில் முதல் முறையாக களமிறங்கிய , Tze Yong உற்சாகமாக விளையாடி, எதிராட்டக்காரரை 21-15, 9-21, 23- 21 என்ற புள்ளிகளில் தோற்கடித்தார் .
Axelsen -னை வீழ்த்த 69 நிமிடங்கள் எடுத்துக் கொண்ட , உலகின் 28-ஆம் நிலை ஆட்டக்காரரான Tze Yong , காலிறுதியில் சீனாவின் Li Shifeng-கை சந்திப்பார்.