
புது டில்லி, ஜன 11 – திரையுலகில் இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுவதும் கொடி கட்டிப் பறக்கும் போலிவூட் நடிகர் ஷாருக்கான் , உலகின் நான்காவது பெரிய பணக்கார நடிகராக திகழ்கிறார்.
World of Statistics எனப்படும் உலக புள்ளிவிபர அமைப்பு, உலகின் பணக்கார நடிகர்களின் பட்டியலை வெளியிட்டிருக்கும் நிலையில், அதில் இடம்பெற்ற ஒரே இந்திய நடிகராக ஷாருக்கான் திகழ்கிறார்.
கடந்த 30 ஆண்டுகால திரையுலகில் 90-கும் மேற்பட்ட படங்களில் நடித்து, பல box Office வெற்றிப் படங்களையும் தந்திருக்கும் அவரின் சொத்து மதிப்பு 77 கோடி டாலர் என குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த பட்டியலில் அவர் Tom Cruise, George Clooney, Jackie Chan போன்ற பிரபல நடிகர்களையும் பின்னுக்குத் தள்ளியிருக்கின்றார்.