Latestமலேசியா

உலகின் 5ஆம் நிலை ஆட்டக்காரராக லீ ஷி ஜியா முன்னேற்றம்

கோலாலம்பூர், மே 24 – இம்மாதம் இரண்டு அனைத்துலக போட்டிகளில் சிறந்த வெற்றியை பதிவு செய்ததன் மூலம் தேசிய ஒற்றையர் பேட்மிண்டன் வீரரான Lee Zii Jia தற்போது உலகின் 5ஆவது இடத்திற்கு முன்னேற்றியுள்ளார். ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷீப் மற்றும் தாய்லாந்து பொது பேட்மிண்டன் போட்டியில் வெற்றியாளர் பட்டத்தை வென்றதைத் தொடர்ந்து Lee Zii Jia இந்த முன்னேற்றத்தை அடைந்துள்ளார்.

இதற்கு முன் அவர் ஆறாவது இடத்தில் இருந்தார். தற்போது இந்தோனேசியாவின் Anthony Ginting ஆறாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார் என அனைத்துலக பேட்மிண்டன் சம்மேளனம் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவித்தது. தற்போது உலகின் முதல் நிலை பேட்மிண்டன் விளையாட்டாளர் என்ற நிலையை டென்மார்க்கின் Viktor Azelsen தொடர்ந்து தற்கவைத்துக்கொண்டுள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!