Latestமலேசியா

உலகின் 9-வது அழகான ஆணாக மலேசியாவின் ஹென்றி கோல்டிங் தேர்வு

கோலாலம்பூர், ஜன 30 – Crazy Rich Asians திரைப்படத்தின் வழி, ஹாலிவூட்டில் பிரபலமான மலேசிய நடிகர் ஹென்ரி கோல்டிங் ( Henry Golding ) உலகின் 9-வது மிக அழகான ஆணாக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.

உடல் தோற்ற அமைப்பை வைத்து பிரிட்டன் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர் பட்டியலிட்டிருக்கும் பத்து அழகான ஆண்களின் பட்டியலை, ஐயர்லாந்தைச் சேர்ந்த பொழுது போக்கு சஞ்சிகையான Joe வெளியிட்டிருக்கின்றது.

அந்த பட்டியலில் , Bridgerton நாடக பிரபலம் ரேஜ் – ஜீன் பேஜ் (Rege – Jean Page) 93. 65 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தைப் பிடித்திருக்கின்றார்.

சரவாக்கைச் சேர்ந்த 35 வயது கோல்டிங் 87. 98 புள்ளிகளைப் பெற்றுள்ளார். அந்த பட்டியலில் ஹாலிவூட் நடிகர்கள் கிறிஸ் ஹெம்ஸ்வொர்த் (Chris Hemsworth), கிறிஸ் எவன்ஸ் (Chris Evans ), ஜோர்ஜ் குலூனி (George Clooney),டுவெய்ன் ஜான்சன் ( Dwayne Johnson ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!