
வாஷிங்டன் , மார்ச் 25 – பேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க் –கும் ( Mark Zuckerberg ) அவரது துணைவியார் டாக்டர் பிரிசில்லா சான் -னும் (Dr Priscilla Chan ) மூன்றாவது குழந்தையை வரவேற்றுள்ளனர்.
தங்களின் மூன்றாவது பெண் குழந்தையான ஆரேலியா சான் ஸ்க்கர்பெர்க் –கின் (Aurelia Chan Zuckerberg) பிறப்பை தமது சமூக அகப்பக்கம் வாயிலாக Zuckerberg அறிவித்தார்.
தாயுடன், குழந்தை இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து ,கடவுள் கொடுத்த வரம் நீ என , அவர் பதிவிட்டுள்ளார்.
2012 -இல் திருமணமான Zuckerberg, Priscilla தம்பதியினருக்கு 7 வயதான மாக்சிமா (Maxima ) , ஐந்து வயதான ஆகஸ்ட் ( August ) ஆகிய இரு பெண் பிள்ளைகள் உள்ளனர் .
கல்லூரியில் படித்து கொண்டிருக்கும்போது காதலித்து கரம் பிடித்த Zuckerberg- கின் மனைவி குழந்தை நல நிபுணத்துவ மருத்துவர் என்பது குறிப்பிடத்தக்கது.