
அமெரிக்கா; ஆக 6 – உலகிலேயே நீண்ட நகங்கள் கொன்ட நபரின் 10 நகங்களின் நீளம் 42 அடி 10.4 அங்குலமாகும். இச்சாதனையை புரிந்து உலக கின்ன்ஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார் அமெரிக்காவைச் சேர்ந்த டயானா ஆம்ஸ்ட்ராங் எனும் பெண்மணி ஒருவர். இவரின் நகம் ஆயிரத்து 306 சென்டி மீட்டர் உயரமாகும். 63 வயதாகும் டயானா, 25 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துபோன தனது மகளின் நினைவாக நகத்தை வெட்டாமல் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆகக்கடைசியாக 1997ஆம் ஆண்டுதான் அவர் தனது கைநகத்தை வெட்டியுள்ளார். இவரின் நீண்ட நகங்களை நேர் வரிசையில் அடுக்கி வைத்து பார்த்தால், ஒரு நடுத்தர பள்ளி பேருந்தின் நீளத்தை தாண்டிவிடுமாம்.