
இதற்கு முன் உலகின் கோடிஸ்வரராக திகழ்ந்த அமெரிக்காவின், Elon Musk, உலகிலேயே 20 ஆயிரம் கோடி அமெரிக்க டாலர் அல்லது 88 ஆயிரம் கோடி ரிங்கிட் பணத்தை இழந்த முதல் மனிதர் என வரலாற்றில் பெயர் பதித்துள்ளார். Tesla மற்றும் ட்விட்டர் நிறுவனங்களின் உரிமையாளரான 51 வயது Musk, 2021-ஆம் ஆண்டு, 20 ஆயிரம் கோடி அமெரிக்க டாலருக்கும் அதிகமான செல்வத்தை சேர்த்ததை அடுத்து, Amazon தோற்றுனர் Jeff Bezos-சுக்கு அடுத்த நிலையில், இரண்டாவது பெரிய கோடிஸ்வரர் என பெயர் பதித்தார். எனினும், கடந்தாண்டு Tesla நிறுவனத்தின் பங்குகள் சரிவு கண்டதை அடுத்து, Musk-கின் செல்வ நிலையை பின்னடைவை எதிர்நோக்கியது. அது Musk இதுவரை பதிவுச் செய்திருக்கும் மிக மோசமான ஒரு அடைவுநிலையாகும். எனினும், “பங்கு சந்தை நிலவரத்தை வைத்து அடைவுநிலையை மதிப்பிட முடியாது, தொடர்ந்து சிறந்த செயல்திறனை வழங்கினால், அதற்கு கட்டாயம் அங்கீகாரம் கிடைக்குமென” தனது தொழிலாளர்களுக்கு அனுப்பிய செய்தி ஒன்றில் Musk குறிப்பிட்டுள்ளார்.