
கோலாலம்பூர் மே 27-சொக்சோ நிறுவனத்தின் நிர்வாகம் இந்த ஆண்டில் சிறந்த செயல்திறனை உருவாக்கியுள்ளது மிகவும் பாராட்டுக்குரியது என்று மனிதவள அமைச்சர்
வி. சிவகுமார் தெரிவித்தார். விருதுகள் உட்பட தேசிய மற்றும் அனைத்துலக அளவில் சொக்சோ சிறந்த சாதனையை பதிவு செய்துள்ளது.
பொதுச் சேவையில்,தொழில் துறையில் ஆசியான் சமூகம் பாதுகாப்பு அங்கீகார விருதை சொக்சோ வென்றுள்ளது. இது தவிர Team Excellence PERKESO குழு அனைத்துலக மாநாட்டில் தங்க விருதையும் ) வென்றுள்ளது. கடந்த ஆண்டில் சொக்சோவின் சாதனைகளின் மிகவும் உச்சமாக அந்த வெற்றிகள் விளங்குகிறது.
இதுதவிர சொக்சோவின் தலைமை செயல் முறை அதிகாரி Dato’ Sri Dr. Mohammed Azman 2025 ஆம் ஆண்டு வரை சர்வதேச சமூக பாதுகாப்பு சங்கம் உலக அமைப்பின் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளது பாராட்டுக்குரியது என சிவக்குமார் தெரிவித்தார். மக்களின் நல்வாழ்வு மற்றும் நாட்டின் சமூக பொருளாதார வளர்ச்சிக்கு சொக்சோ முக்கிய பங்காற்ற வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். சொக்சோவைச் சேர்ந்த 202 பணியாளர்களுக்கு சிறந்த விசுவாசமான சேவை விருதுகள் வழங்கி சிறப்பிக்கப்பட்ட நிகழ்வில் உரையாற்றியபோது சிவக்குமார் இதனை தெரிவித்தார்.