
உலக கிண்ண இறுதியாட்டத்தில் அடைந்த ஏமாற்றத்தை தம்மால் ஒருபோதும் ‘கடந்து’ செல்ல முடியாது என, பிரான்ஸ் அணியின் நட்சத்திர ஆட்டக்காரரான Kylian Mbappe கூறியுள்ளார். அர்ஜென்டினாவுக்கும், பிரான்சுக்கும் இடையிலான இறுதியாட்டத்தில், Mbappe hat-trick கோல்களை புகுத்திய போதும், பெனால்டி வாயிலாக உலக கிண்ணம் அர்ஜெண்டினாவுக்கு சொந்தமானது. அந்த தோல்விக்கு பின்னர் “கடினமான காலத்தை” தாம் கடக்க நேர்ந்ததாக கூறிய Mbappe, காத்தாரில் இருந்த போது கூட வருதத்தோடு காணப்பட்டார். உலக கிண்ண ஆட்டத்திற்கு பின்னர், நேற்று PSG அணிக்காக விளையாடிய Mbappe, 96-வது நிமிடத்தில் பினால்டி வாயிலாக வெற்றியைத் தேடித் தந்தார்.