Latestஉலகம்

உலக கிண்ண ஹாக்கி; மலேசியா நியு சிலாந்தை தோற்கடித்தது

புபனேஸ்வர், ஜன 20 – இந்தியா புபனேஸ்வரில் நடைபெற்று வரும், உலகக் கிண்ண ஹாக்கிப் போட்டியில் , மலேசியா நியு சிலாந்தை 3-2 என்ற கோல் எண்ணிக்கையில் வீழ்த்தியதை அடுத்து, காலிறுதியில் நுழைவதற்கான தனது வாய்ப்பை பிரகாசப்படுத்துக் கொண்டது.

C குழுவிலான இறுதி ஆட்டத்தில் ,Speedy Tigers அணியினரின் மூன்று கோல்களையும் Faizal Saari -யும், Razie Rahim-மும் அடித்தனர்.

இந்த வெற்றியை அடுத்து, 6 புள்ளிகளுடன் C குழுவில் இரண்டாம் இடத்தைப் பிடித்திருக்கும் Speedy Tigers அணியினர், D குழுவில் 3 -ஆம் இடத்தைப் பிடிக்கும் இங்கிலாந்து , இந்தியா அல்லது Spain அணியுடன் மோதும்.

அந்த ஆட்டத்தின் வாயிலாக காலிறுதிச் சுற்றுக்கு தகுதி பெறும் அணி உறுதிச் செய்யப்படும்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!