Latestமலேசியாவிளையாட்டு

உலக சாம்பியன்ஷீப் பேட்மிண்டன் போட்டி காலிறுதியாட்டத்தில் பியர்லி டான் – தீனா ஜோடி தோல்வி

கோலாலம்பூர், ஆக 26 – Copenhagen னில் நடைபெற்றுவரும் உலகக் சாம்பியன்ஷீப் பேட்மிண்டன் போட்டியில் அரையிறுதி ஆட்டத்திற்கு தேர்வு பெறும் முயற்சியில் மலேசியாவின் பியர்லி டான் – எம். தீனா ஜோடி தோல்வி கண்டனர். நேற்று நடைபெற்ற காலிறுதியாட்டத்தில் சீனாவின்Zheng Shu Xiang-Zheng Yu ஜோடியிடம் 21-17, 17-21, 19-21 என்ற புள்ளிக்கணக்கில் பியர்லி டான் – தீனா தோல்வி கண்டனர்.

உலகின் 11 ஆம் நிலை ஆட்டக்காரரகளாக ராக கணிக்கப்பட்டுள்ள பியர்லி டான் – தீனா முதல் செட்டில் 21 -17 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றிப் பெற்றபோதிலும் அதன் பின்னர் நடைபெற்ற அடுத்த இரண்டு செட்டுக்களிலும் தோல்வி கண்டனர் .

இதனிடையே ஆண்கள் இரட்டையர் பிரிவில் நடப்பு சாம்பியன்களான மலேசியாவின் Aaron Chia -Soh Wooi Yik ஜோடி அரையிறுதி ஆட்டத்திற்கு தகுதி பெற்றனர். அவர்கள் காலிறுதியாட்டத்தில் கடுமையான போராட்டத்திற்குப் பின் 21-10. 15-21, 21-14 என்ற புள்ளிக் கணக்கில் சீனாவின் Liu Yuchen -ou ஜோடியை வீழ்த்தினர். இன்று நடைபெறும் அரையிறுதி ஆட்டத்தில் Aaron Chia – Soh wooi Yi ஜோடி தென் கொரியாவின் Kang Min -hyuk -Seo Seung -joe இணையுடன் மோதுவார்கள்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!