Latestஉலகம்

உலக நாடுகள் ஒமிக்ரோனை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும்; WHO எச்சரிக்கை

ஜெனிவா, டிச 3 – ஒமிக்ரோன் வைரஸ் பரவலை அடுத்து, புதிய கோவிட் தொற்றுகள் அதிகரிக்குமென , உலக நாடுகளுக்கு WHO எச்சரிக்கை விடுத்துள்ளது. தற்போது அறிவிக்கப்பட்டதைக் காட்டிலும், ஒமிக்ரோன் ஏற்கனவே பல நாடுகளுக்கு பரவியிருக்கலாமென, மேற்கு பசிபிக் வட்டாரத்துக்கான் இயக்குநர் Dr. Takeshi Kasai கூறியிருக்கின்றார்.

டெல்தா வைரசை எதிர்கொண்ட அனுபவம் உலக நாடுகளுக்கு உண்டு. அதைக் கொண்டு, ஒமிக்ரோன் மருட்டலை எதிர்கொள்ள நாடுகள் தயாராக இருக்க வேண்டுமென அவர் கூறினார்.

ஒமிக்ரோன் வைரசை எதிர்கொள்வதற்கு வேறு அணுகுமுறையைக் கையாள வேண்டிய அவசியம் உள்ளதா என, அதிகமான ஆராய்ச்சி மையங்களைக் கொண்டு, WHO தற்போது ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது . அது வரையில், முகக் கவசம் அணிவது, தூர இடைவெளியைக் கடைப்பிடிப்பது, கைகளை அடிக்கடி கழுவது, கூட்ட நெரிசலை தவிர்ப்பது, தடுப்பூசி போட்டுக் கொள்வது போன்ற நடப்பில் இருக்கும் SOP – களை மக்கள் தொடர்ந்து கடைப்பிடிப்பது அவசியமென WHO வலியுறுத்தியிருக்கின்றது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!