Latestமலேசியாவிளையாட்டு

உலக ஹாக்கி கிண்ண போட்டிகளை RTM நேரலையாக ஒளிபரப்பு செய்கிறது

கோலாலம்பூர், ஜன 14 – நேற்று முதல் RTM TV ஒன்றில், உலக ஹாக்கி கிண்ணப் போட்டிகள் ஓளிபரப்பு செய்யப்பட்டிருப்பதாக, தொடர்பு – இலக்கவியல் அமைச்சர் Fahmi Fadzil தெரிவித்தார்.

அந்த ஒளிபரப்பின் மூலமாக, C குழுவில் இடம்பெற்றிருக்கும் மலேசிய அணியான Speedy Tigers களம் இறங்கும் ஆட்டத்தை , மலேசிய ஹாக்கி ரசிகர்கள் கண்டு களிக்கும் வாய்ப்பை பெறுவார்கள் என அமைச்சர் கூறினார்.

உலக தர வரிசையில் 11-வது இடத்தில் இருக்கும் Speedy Tigers- அணியினர் , இன்று குழு நிலையிலான ஆட்டத்தில் நடப்பு வெற்றியாளரான நெதர்லாந்துடன் மோதவிருக்கின்றனர்.

உலக ஹாக்கி கிண்ணம், ஜனவரி 13 -ஆம் தேதியிலிருந்து ஜனவரி 29-ஆம் தேதி வரை இந்தியா , Bhubaneswar, Rourkela பகுதிகளில் நடைபெற்று வருகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!