ஈப்போ, டிசம்பர்-27, பேராக், உலு கிந்தா, சுங்கை ச்சோ பூர்வக்குடி கிராமம் அருகே கால்நடைகளைப் புலித் தாக்கியதாக, வனவிலங்குப் பாதுகாப்பு மற்றும் தேசியப் பூங்காக்கள் துறையான PERHILITAN-னுக்குப் புகார் கிடைத்துள்ளது.
இந்நிலையில் சம்பவ இடத்திற்கருகில் புலியின் கால் தடங்களோடு, கால்நடைகள் காயமடைந்திருப்பதும் கண்டறியப்பட்டதாக, பேராக் PERHILITAN இயக்குநர் Yusoff Shariff தெரிவித்தார்.
இதுவரையிலான கண்காணிப்பின் படி அது வயது வந்த புலியாக இருக்கலாம்; ஆனால் அதன் பாலினம், எடை போன்றவை அங்கு பொருத்தப்பட்டுள்ள CCTV கேமராவில் பதிவாகும் காட்சிகளைப் பொருத்தே தெரிய வருமென்றார் அவர்.
இந்நிலையில், கால்நடைகளை மேய்ச்சலுக்கு விடும் போது குறிப்பாக புலி தாக்கிய இடத்தருக்கே கவனமுடன் இருக்குமாறு கிராம மக்களை Yusoff கேட்டுக் கொண்டார்.
முடிந்தவரை கால்நடைகளை கூண்டுக்குள்ளேயே அடைத்து விட வேண்டும்; வெளியில் விட்டால் புலியின் நடமாட்டம் திரும்ப வரலாமென அவர் சொன்னார்.
கிராம மக்களும் தனியே நடந்து செல்ல வேண்டாமென அவர் கேட்டுக் கொண்டார்.
.
இதே கடந்தாண்டு டிசம்பர் 20-ஆம் தேதி உலு கிந்தாவில் தஞ்சோங் டாமாய் வீடமைப்புப் பகுதியில் 90 கிலோ கிராம் எடையில் சுற்றித் திரிந்த 4 வயது ஆண் புலி பிடிபட்டது குறிப்பிடத்தக்கது.