அம்பாங் ஜெயா, நவம்பர்-27, சிலாங்கூர், உலு கிள்ளானில் கார் கழுவும் கடையொன்றில் நவம்பர் 17-ஆம் தேதி ஃபெராரி (Ferrari) கார் காணாமல் போனது தொடர்பில், அறுவர் கைதாகியுள்ளனர்.
23 முதல் 40 வயதிலான 5 ஆண்களையும் ஒரு பெண்ணையும், மாவட்ட போலீஸ் தலைமையகத்தின் குற்றப்புலனாய்வுத் துறை அம்பாங் சுற்று வட்டாரத்தில் கைதுச் செய்தது.
அவர்களில் ஐவர் மலேசியர்கள், ஒருவர் வெளிநாட்டவர் என சிலாங்கூர் போலீஸ் தலைவர் டத்தோ ஹுசேய்ன் ஓமார் கான் (Datuk Hussein Omar Khan) தெரிவித்தார்.
கைதான போது ஒரு சந்தேக நபர் போதைப்பொருள் உட்கொண்டிருந்ததோடு, போதைப்பொருள் தொடர்பில் அவருக்கு ஏற்கனவே 2 குற்றப்பதிவுகள் இருந்ததும் கண்டறியப்பட்டது.
அவர்களிடமிருந்து 8 கைப்பேசிகள், 1 ஃபெராரி உள்ளிட்ட 2 கார்களின் சாவிக் கொத்துகள், 1 மலேசியக் கடப்பிதழ், கத்தி மாட்டப்பட்ட ஒரு lanyard கையிறு உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.
முக்கியமாகக், காணாமல் போன ஃபெராரி காருடன் சேர்த்து Naza Suria, BMW X5, BMW ஆகிய 3 கார்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
தலா ஒரு BMW, Honda, மற்றும் Toyota கார்களுக்கான remote control எனப்படும் தொலை இயக்கிகள், வீட்டுக்குள் நுழைவதன்கான அட்டை, ‘Diamond’ என எழுதப்பட்ட ஒரு காலி பிளாஸ்டிக் பை உள்ளிட்டவையும் கைப்பற்றப்பட்டன.
3 சந்தேக நபர்கள் போலீஸ் ஜாமீனில் விடுவிக்கப்பட்ட வேளை, இருவர் தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.