உலு லஙாட், அக்டோபர்-12, சிலாங்கூர், உலு லஙாட், கம்போங் சுங்கை செமுங்கிஸ் பொழுதுபோக்கு பகுதியில் நண்பர்களுடன் குளித்து விளையாடிய போது, பதின்ம வயது பையன் நீரில் மூழ்கி உயிரிழந்தான்.
ஜாலான் சுங்கை செமுங்கிஸில் வெள்ளிக்கிழமை மாலை அச்சம்பவம் நிகழ்ந்தது.
தகவல் கிடைத்து சம்பவ இடம் விரைந்த தீயணைப்பு-மீட்புத் துறை, பாறைகளுக்கு இடையில் அப்பையன் சிக்கியிருப்பதைக் கண்டது.
ஒருவழியாக இழுத்து மேலே கொண்டு வந்த போது, அவன் ஏற்கனவே இறந்து விட்டதை மருத்துவக் குழு உறுதிப்படுத்தியது.
பாண்டான் பெர்டானாவைச் சேர்ந்த 15 வயது அப்பையன், 11 நண்பர்களுடன் அங்குச் சென்றுள்ளான்.
அவனது சடலம் மேல் நடவடிக்கைக்காக போலீசிடம் ஒப்படைக்கப்பட்டது.