
கோலாலம்பூர், செப் 12 – நோர்வேயில் (Norway ) உளவு பார்த்தாக கூறப்பட்ட மலேசிய மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டார். பல்வேறு தொழிற்நுட்ப சாதனங்களைப் பயன்படுத்தி சட்டவிரோதமாக ஒட்டுக் கேட்டதற்காகவும் 25 வயதுடைய அந்த மாணவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். பிரதமர் அலுவலகம், தற்காப்பு அமைச்சு மற்றும் ஒஸ்லோவிலுள்ள இதர அரசாங்க அலுவலகங்களில் அந்த நபர் உளவு பார்த்ததாக நோர்வோ போலீஸ் உளவு நிறுவனம் குற்றஞ்சாட்டியதாக அந்நாட்டின் ஊடகம் செய்தி வெளியிட்டது. செப்டம்பர் 8 ஆம் தேதி வெள்ளிக்கிழமையன்று கைது செய்யப்பட்ட அந்த ஆடவர் ஞாயிற்றுக்கிழமை செப்டம்பர் 10ஆம் தேதி நீதிமன்றத்தில் குற்றச்சாட்டப்பட்டார் என நோர்வே உளவு நிறுவன போலீஸ் அந்நாட்டின் ஒளிபரப்பு நிலையத்திற்கு தெரிவித்துள்ளது. அந்த ஆடவரின் அடையாளங்கள் வெளியிடப்படவில்லை. தொடக்கக்கட்ட போலீஸ் விசாரணையின்போது அவர் குற்றச்சாட்டை மறுத்தார்.
அதோடு அந்த நபர் எந்த நாட்டிற்காக உளவு பார்த்தார் என்பதை நோர்வே அதிகாரிகள் தெரிவிக்கவில்லை. சட்டவிரோத அடையாள உளவு தொழிற்நுட்ப சாதனத்தை அவர் பயன்படுத்தயதாக குற்றஞ்சாட்டப்பட்டார் என அரசாங்க வழக்கறிஞர் ஃப்ரெட்ரிக் ப்ளோம் தெரிவித்தார். அந்த நபரிடம் பல மின்னியல் சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன, பல புள்ளி விவரங்களைக் கொண்ட அந்த சாதனங்களை நோர்வே உளவுப் பிரிவு போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.