
கோலாலம்பூர், மார்ச் 13 – உள்றுறை அமைச்சர் சைபுடின் நீக்கப்பட வேண்டும் என்பதோடு மனித உரிமை மற்றும் நீதியை நிலைநாட்டக்கூடிய ஒருவர் அப்பதவிக்கு நியமிக்கப்பட வேண்டும் என Madpet எனப்படும் மரண தண்டனை மற்றும் சித்ரவதைக்கு எதிரான மனித உரிமை இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது. அதோடு சொஸ்மா சட்டத்தை அகற்றக்கூடிய ஒருவர் உள்துறை அமைச்சர் பதவிக்கு நியமிக்கப்பட வேண்டும் என்று Madpet பேச்சாளரான Charles Hector கேட்டுக்கொண்டார். எந்த ஒருவரையும் தண்டிக்கப்படுவதற்கு சொஸ்மா பயன்படுக்கூடாது என்பதோடு பக்காத்தான் ஹராப்பானின் தேர்தல் கொள்கை அறிக்கையில் வழங்கப்பட்ட வாக்குறுதிக்கு ஏற்ப சொஸ்மா அகற்றப்பட வேண்டும் என இன்று வெயிட்ட அறிக்கையில் அவர் வலியுறுத்தினார்.