ஹுலு திரெங்கானு, மார்ச் 1 – கோவிட் தொற்றினால் தனிமைப்-படுத்தப்பட்டுள்ளதால் ஹுலு திரெங்கானுவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களைத் தம்மால் சந்திக்க இயலாமல் போயிருப்பதாக ஹுலு திரெங்கானு நாடாளுமன்ற உறுப்பினர் Datuk Rosol Wahid கூறியுள்ளார்.
ஆபத்தின்போது , தமது தொகுதி மக்களைச் சந்தித்து உதவ முடியாமல் போயிருப்பதற்காக அவர் மன்னிப்பு கேட்டுக் கொண்டார்.
எனினும், ஹுலு திரெங்கானு நாடாளுமன்ற சேவை மையத்தின் அதிகாரிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் நடவடிக்கையில் விரைந்து ஈடுபட்டிருப்பதாக, உள்நாட்டு வாணிப பயனீட்டாளர் விவகார துணையமைச்சருமான அவர் கூறினார்.