Latestமலேசியா

செமெஞ்ஞேவில், சாலையோர தகராறில் முதியவர் தாக்கப்படும் வீடியோ வைரல்; வலுக்கும் கண்டனம்

கோலாலம்பூர், ஜனவரி 12 – சாலை விபத்தை தொடர்ந்து ஏற்பட்ட வாக்குவாதத்தையும், சண்டையையும் சித்தரிக்கும், சமீபத்திய வீடியோ ஒன்று, சமூக ஊடகங்களில் வைரலாகி, பொதுமக்களின் வருத்தத்தையும், சீற்றத்தையும் ஒருங்கே தூண்டியுள்ளது.

X சமூக ஊடகத்தில், @MohamadYusofBi6 எனும் நபரால் பகிரப்பட்டுள்ள அந்த வீடியோவில், ஓட்டுனரான முதியவர் ஒருவரையும், பயணி ஒருவரையும் இரு நபர்கள் தாக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

அந்த காணொளிக்கு கீழ், சம்பந்தப்பட்ட பயனர், மனுகுலத்தின் தற்போதைய நிலை குறித்து கவலை தெரிவித்திருப்பதோடு, அதுபோன்ற சம்பவங்களை தடுக்க அவர் மற்றவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

“இப்பொழுதெல்லாம் மனிதர்களுக்கு என்னவானது? அதுப்போன்ற சம்பவம் நம் குடும்பத்தாருக்கு குறிப்பாக வயதானவர்களுக்கு நிகழ்வதை தவிர்ப்போம். மனிதத்தோடு வாழ்வோம்” எனவும் அவர் பதிவிட்டுள்ளார்.

அந்த காணொளியில், சினம் கொண்ட ஆடவன் ஒருவன், சம்பந்தப்பட்ட முதியவரை ஆக்ரோஷமாக தாக்குகிறான். பின்னர் காரின் கண்ணாடியை குத்தி உடைக்க முனைகின்றான். பின்னர் அங்கிருந்த மற்றொரு பயணியையும் அடிக்கிறான்.

அந்த காணொளியை இதுவரை நான்கு லட்சத்து 50 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பார்வையிட்டுள்ள வேளை ; அதில் பலர் அவ்வாடவனின் செயல் குறித்து கடும் கண்டனத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

அவ்வாடவன் உடனடியாக கைதுச் செய்யப்பட வேண்டும் எனவும், பெரியவர்களுக்கு எப்படி மரியாதை தருவது என்பதை அவர்களுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும் எனவும் பலர் சினத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

அச்சம்பவம் சிலாங்கூர் செமெஞ்ஞேவில் நிகழ்ந்ததாக கூறப்படுவதை அம்மாவட்ட போலீசார் மறுத்துள்ள வேளை ; அது பேரனாங்கில் நிகழ்ந்த சம்பவம் எனவும், அச்சம்பவம் தொடர்லில் இதுவரை போலீஸ் புகார் எதுவும் செய்யப்படவில்லை என்பதும் தெரிய வந்துள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!