
ஹாங் காங், செப் 19 – சீனாவில் வளர்ப்பு பிராணி கடை உரிமையாளரான பெண் ஒருவர் தனது உள்ளாடைக்குள் 15 பாம்பு, 4 ராட்சச கரப்பான்பூச்சி மற்றும் ராட்சச பல்லியை கடத்த முயன்றபோது அண்மையில் கைது செய்யப்பட்டார்.
32 வயதான அப்பெண், ஹாங்காங்கிலிருந்து சீனாவுக்கு அந்த நச்சுத்தன்மைக் கொண்ட அரிய வகை உயிரினங்களை கடந்த முயன்றபோது பிடிபட்டார்.
சுங்க அதிகாரிகள் அந்தப் பெண் பதட்டமாக இருப்பதைக் கண்டு சந்தேகத்தின் பேரில் அப்பெண்ணை பரிசோதித்துள்ளனர் அச்செயல் அம்பலமானது.