Latestமலேசியா

உள்ளூர் திறமைகளையும் தயாரிப்புகளையும் கொண்டாடிய ‘உலகம் விருதுகள்’

கோலாலம்பூர், ஜன 14 – கலைத் துறையைச் சேர்ந்த உயர் திறனாற்றல் கொண்ட உள்ளூர் திறமைகளையும், தயாரிப்புளையும் கொண்டாடும் ஆஸ்ட்ரோ உலகத்தின், முதல் ‘உலகம் விருதுகள்’ நிகழ்ச்சி நேற்று இரவு , PICC- புத்ராஜெயா அனைத்துலக மாநாட்டு மையத்தில், கோவிட் கட்டுப்பாடுகளுடன் மிக பிரமாண்டமாக நடைபெற்றது.

உள்ளூர் கலை பிரபலங்கள் கலந்து கொண்டு சிறப்பித்த அந்த விருதளிப்பு நிகழ்ச்சியில், பிரபல விருதுகள், சிறந்து விருதுகள் என பிரிவுகளாக விருதுகள் வழங்கப்பட்டன.
அதில் டெலிமூவிக்கான பிரபல ஆண் கதாபாத்திர நடிகராக ஆடி தொலைக்காட்சி படத்தில் நடித்த யுவராஜ் கிருஷ்ணசாமி தேர்வு செய்யப்பட்ட வேளை, அதே படம் பிரபல டெலிமூவிக்கான் விருதையும் தட்டிச் சென்றது.

இவ்வேளையில் பிரபல தொடராக அஸ்ட்ரோ விண்மீனில் ஒளியேறிய கல்யாணம் 2 காதல் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், அத்தொடரில் நடித்திருந்த பாஷினி பிரபல பெண் கதாபாத்திரத்துக்கான விருதினைப் பெற்றார். இந்த உலகம் விருதுகள் நிகழ்ச்சி ஆஸ்ட்ரோ விண்மீனிலும் Astro Go- விலும் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!