Latestஉலகம்

ஊசியில் காற்றை செலுத்தி 4 நோயாளிகளை கொலை செய்தார் தாதி

டெக்சஸ், அக் 22 – இருதய சிகிச்சைக்குப் பின்னர் ,   நான்கு நோயாளிகளுக்கு வெறும் காற்றடைத்த ஊசியை செலுத்தி,  அவர்கள் உயிரிழக்க காரணமாக இருந்ததாக,  அமெரிக்கா , டெக்சஸ் -சைச் சேர்ந்த தாதி மீது  கொலை குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட  நோயாளிகள் அறுவை சிகிச்சைக்குப் பின்னர் குணமடைந்து வந்த நிலையில், அவர்களுக்கு திடீர் வலிப்பு போன்ற பாதிப்புகள் ஏற்பட்டு இறந்ததை அடுத்து மருத்துவர்கள் சந்தேகப்பட்டனர்.

பின்னர் உயிரிழந்தவர்களின் மூளையை எக்ஸ்ரே படமெடுத்ததில், மூளையில் காற்றின் வாயு இருந்ததோடு,  ரகசிய காமிரா பதிவுகளையும் ஆராய்ச்சி செய்ததில்,  நோயாளிகளின் மரணத்திற்கு சம்பந்தப்பட்ட தாதியே காரணம் என்பது தெரிய வந்தது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!