
டணம் இலவசம் என அறிவித்துள்ளார் தொடர்பு மற்றும் இலக்கவியல் அமைக்ச்சர் பாமி பாட்சில். செம்டம்பர் மாதம் தொடங்குவுள்ள இந்த சலுகையால் நாட்டிலுள்ள ஏறக்குறைய 10,000 ஊடகவியலாளர்கள் பயன் பெறுவார்கள்.
Rahmah திட்டம் தொடர்பான தகவல்களை மக்களிடம் கொண்டுபோய்ச் சேர்த்த ‘Unsung heroes’ அதாவது அறியப்படாத ஹீரோக்கள் நமது ஊடகவியலாளர்கள். அவர்களுக்கு நன்றி பாராட்டும் ஒரு நடவடிக்கையாகத்தான் இந்த சலுகை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மலேசிய தகவல் துறையின் கீழ் பதிவுப்பெற்று ஊடக அடையாள அட்டை வைத்திருக்கும் அனைத்து ஊடகவியலாளர்களும் இந்த சலுகைக்கு தகுதி பெறுகிறார்கள்.
இது குறித்த மேல் விவரங்கள், TM , Celcom, Digi, Maxis, U Mobile மற்றும் YTL Communications போன்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களுடன் ஒருங்கிணைக்கப்பட்டப் பிறகு பின்னர் அறிவிக்கப்படும் என்றும் பாமி தெரிவித்தார்.