Latestமலேசியா

ஊராட்சி மன்றங்களின் சிறு சட்டத்திற்கு உட்பட்டே விளம்பர பலகையில் தேசிய மொழி விளம்பரம் இருக்க வேண்டும் – DBP வலியுறுத்து

கோலாலம்பூர், நவ 26 – ஊராட்சி மன்றங்களின் சிறு சட்டத்தின் விதிமுறைக்கு உட்பட்டே வர்த்தக இடங்களில் விளம்பர பலகைகளில் தேசிய மொழியை பயன்படுத்துவதற்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என Dewan Bahasa Dan Pustaka வலியுறுத்தியுள்ளது. கோலாலம்பூர் கூட்டரசு பிரதேசத்தின் சிறு சட்ட விதிகளின்படி அனைத்து விளம்பரங்களும் தேசிய மொழியில் இருக்க வேண்டும் மற்றும் விளம்பர பலகைகளில் அல்லது அதே விளம்பரம் இதர மொழிகளில் பயன்படுத்துவதற்கு தடைவிதிக்கப்படவில்லை என Dewan Bahasa Dan Pustaka வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

எனவே லைசென்ஸ் இன்றி தங்களது வர்த்தக இடங்களில் விளம்பரத்தை வைப்பவர்கள் மற்றும் விளம்பர பலகையில் தேசிய மொழிக்கு முன்னுரிமை கொடுப்பாதவர்களுக்கு எதிராக கோலாலம்பூர் மாநகர் மன்றத்தின் அமலாக்க பிரிவு மேற்கொள்ளும் நடவடிக்கைக்கு முழுமையான ஆதரவை Dewan Bahasa Dan Pustaka தெரிவித்துள்ளது. ஆண்டுதோறும் தங்களது லைசென்ஸ்சுகளை புதுப்பிக்கும் கடை உரிமையாளர்கள் இந்த சிறு சட்டங்களின் அம்சங்களை புரிந்துகொண்டு அதற்கேற்றபடி செயல்படுவது அவசியம் என்றும் Dewan Bahasa Dan Pustaka கூறியுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!