
கோலாலம்பூர், ஜன 7 – நெத்திலிகளை மட்டும் பிடித்துக்கொண்டிருக்காமல் ஊழலில்
ஈடுபட்ட பெரிய சுறாமீன்களையும் பிடிப்பதற்கு வலைவீசும்படி ஊழல் தடுப்பு ஆணையமான Macc யை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கேட்டுக்கொண்டுள்ளார். இன பாகுபாடு இன்றி அனைத்து மலேசியர்களுக்கும் முன்னேற்றத்தை கொண்டுவருவதை உறுதிப்படுத்துவதற்கு வாழ்க்கை செலவினத்தை குறைத்து பொருளாதார மீட்சியை கொண்டுவருவதற்கு முன்னுரிமை வழங்கப்போவதாக அன்வார் தெரிவித்திருக்கிறார்.
பெரும்பாலான ஏழைகளாக இருக்கும் மலாய்க்காரர்கள், இந்தியர்கள், பூர்வ குடிகள் மற்றும் நகர்ப்புறங்களுக்கு அப்பால் ஏழைகளாக உள்ள சீனர்களுக்கும் உதவுவதில் தாம் முன்னுரிமை கொண்டுள்ளதாக ஆர்.டி.எம் முதலாவது ஒளியலையில் ஒளியேறிய Bicara Naratif நிகழ்சிக்கு வழங்கிய பேட்டியில் அன்வார் தெரிவித்தார்.