கோலாலம்பூர், மார்ச் 1 – லஞ்ச ஊழலை துடைத்தொழிப்பதில் அரசாங்கம் முழு கடப்பாட்டைக் கொண்டுள்ளது. இந்த விவகாரத்தில் அரசாங்கம் யாரையும் பாதுகாக்கவில்லை என பிரதமர் டத்தோஸ்ரீ ismail Sabri Yaakob தெரிவித்தார்.
அதோடு லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுக்களை ஒருவர் மீது கொண்டு வருவதில் அரசாங்கம் தேர்ந்தெடுக்கும் போக்கை கொண்டிருக்கவில்லையென பிரதமர் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
அரசியல் தலைவர்கள் சம்பந்தப்பட்ட அதிகமான ஊழல் வழக்குகள் தற்போது நடைபெற்று வருவதையும் அவர் சுட்டிக்காட்டினார். ஊழலில் யார் சம்பந்தப்பட்டிருந்தாலும் நடவடிக்கை எடுப்பதில் அரசாங்கம் உறுதியாக இருக்கிறது என்பதை நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கு விசாரணைகள் காட்டுவதாக Ismail Sabri தெரிவித்தார்.
Transparency international வெளியிட்ட ஆகக்கடைசியான ஊழல் குறியீட்டில் மலேசியா மேலும் பின்னடைவுக்கு சென்றுள்ளதற்கு ஊழலை துடைத்தொழிப்பதில் அரசாங்கம் குறைவான அரசியல் ஆர்வத்தை கொண்டிருப்பதே காரணம் என எதிர்க்கட்சி தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் கூறியிருந்த குற்றச்சாட்டிற்கு பதில் அளித்தபோது பிரதமர் இத்கவலை வெளியிட்டார்.