புத்ராஜெயா, பிப் 23 – தம் மீதான ஊழல் விசாரணயை நிறுத்தும்படி கேட்டு அம்னோ தலைவர் டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மாட் சாஹிட் ஹமிடி தம்மை நேரில் சந்தித்ததாக, துன் டாக்டர் மகாதீர் முஹமம்ட் கூறியுள்ளார்.
தாம் மீண்டும் பிரதமராகக் கூடுமென பேச்சுகள் எழுந்தபோது, சாஹிட் தம்மை வீட்டில் சந்தித்து, தம்முடன் நல்ல உறவை ஏற்படுத்திக் கொள்ள முற்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.