Latestமலேசியா

ஊழல் விஷயத்தை இன-மதவாதமாக திசைத் திருப்புவதா? – துணை IGP சாடல்

கோலாலம்பூர், ஆகஸ்ட்-8 – ஊழலை இன மற்றும் மதவாதமாக மாற்ற முயலும் தரப்பினரை தேசியப் போலீஸ் படையின் துணைத் தலைவர் டத்தோ ஸ்ரீ ஆயோப் கான் மைடின் பிச்சை (Datuk Seri Ayob Khan Mydin Pitchay) சாடியுள்ளார்.

புள்ளிவிவரங்களைப் பார்த்தால், ஊழலுக்காகக் கைதானவர்களில் முஸ்லீம்களே அதிகம் என்பதை அவர் சுட்டிக் காட்டினார்.

ஆனால், தவறு செய்தவர்களை இன மத பாகுபாடின்றி கைதுச் செய்து நடவடிக்கை எடுக்கும் போது, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (MCMC), போலீஸ் உள்ளிட்ட தரப்புகள் ‘குறி’ வைக்கப்படுகின்றன.

அதாவது, லஞ்சம் கொடுப்பவர்களை விட்டு விட்டு, லஞ்சம் வாங்குபவர்களை மட்டுமே அதிகார தரப்பு குறி வைப்பதாக குற்றம் சாட்டப்படுகிறது.

லஞ்சம் கொடுப்பவர்களில் முஸ்லீம் அல்லாதோரே அதிகமென்பதை ஒரு துருப்புச் சீட்டாக எடுத்துக் கொண்டு, அவர்களை ஏன் கைதுச் செய்வதில்லை என சிலர் இனவாதமாகக் கேட்கின்றனர்.

லஞ்சம் வாங்கியதோ நீங்கள், ஆனால் அடுத்தவர் மீது பழிபோடப் பார்ப்பது நியாயமா என டத்தோ ஸ்ரீ ஆயோப் கான் கேட்டார்.

லஞ்சம் வாங்குவது மிகவும் அருவருப்பான செயலாகும்; உண்மையிலேயே இறைச்சிந்தனை இருப்பவர்கள் லஞ்சம் வாங்க மாட்டார்கள்.

ஆனால், எங்கும் எதிலும் ஊழல் மலிந்துக் கிடக்கும் இக்காலத்தில், லஞ்சம் வாங்குவதை ஒரு கூட்டம் நியாயப்படுத்தி வருவது கவலையளிப்பதாக அவர் சொன்னார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!