பெட்டாலிங் ஜெயா, ஆகஸ்ட் 26 – ஊழியர் சேம நிதி வாரியத்தின் புதிய தலைவராக நாட்டின் முன்னாள் தலைமைச் செயலாளர் முஹமட் ஜூகி அலி (Mohd Zuki Ali) நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நியமனம் செப்டம்பர் 1-ஆம் திகதி முதல் அமலுக்கு வரும் என்று ஊழியர் சேம நிதி வாரியம் தெரிவித்துள்ளது.
கடந்த 2020-ஆம் ஆண்டு மே மாதம் 1-ஆம் திகதி முதல் ஊழியர் சேம நிதி வாரியத்தின் தலைவராகப் பணியாற்றி வந்த அஹ்மத் பத்ரி ஜாஹிர்க்குப் (Ahmad Badri Zahir) பதிலாக ஜூகி அலி (Zuki Ali) தற்போது அப்பதிவிக்கு வரவிருக்கிறார்.