Latestஉலகம்மலேசியா

எகிப்து செங்கடலில் சுற்றுப்பயணிகளின் நீர்மூழ்கிக் கப்பல் மூழ்கியதில் 6 பேர் பலி

கெய்ரோ, மார்ச்-28- எகிப்து செங்கடலில் 45 சுற்றுப்பயணிகளை ஏற்றியிருந்த நீர்மூழ்கிக் கப்பல் கடலில் மூழ்கியதில், குறைந்தது அறுவர் பலியாயினர்.

39 சுற்றுப்பயணிகள் காப்பாற்றப்பட்டனர்.

அவர்களில் கவலைக்கிடமாக உள்ள 5 பேரையும் சேர்த்து 9 பேர் காயமடைந்தனர்.

மரணமடைந்த அறுவருமே ரஷ்ய நாட்டவர்கள் என உள்ளூர் கவர்னர் உறுதிப்படுத்தினார்.

Sinbad என்ற பெயரிலான அந்த நீர்மூழ்கிக் கப்பல், ஆழ்கடல் பவளப்பாறைகளைக் காண வேண்டி 45 சுற்றுப்பயணிகளை அழைத்துச் சென்றது.

ரஷ்யாவைத் தவிர்த்து, நோர்வே, சுவீடன் மற்றும் இந்தியாவைச் சேர்ந்த சுற்றுப்பயணிகளிகளும் அவர்களில் அடங்குவர்.

எகிப்தைச் சேர்ந்த 5 கப்பல் பணியாளர்களும் உடன் சென்றனர்.

இந்நிலையில் சம்பவத்துக்கான காரணம் கண்டறியப்பட்டு வருவதால், விசாரணை முடியும் வரை, Sinbad நிறுவனம் தனது அடுத்தடுத்த பயணங்களை இரத்துச் செய்துள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!