
குயிட்டோ, மார்ச் 19 – எக்குவாடோர் ( Ecuador) கடற்கரை பகுதியையும், பெருவின் (Peru ) வடப் பகுதியையும் வலுவான நிலநடுக்கம் உலுக்கியதில், குறைந்தது 12 பேர் கொல்லப்பட்டனர்.
66 கிலோமீட்டர் ஆழத்திற்கு 6. 8 Magnitude – ஆக பதிவான அந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து மக்கள் பீதி அடைந்து வீடுகளில் இருந்து வெளியேறி சாலைகளில் திரண்டனர். மேலும் கட்டடங்கள் இடிந்து விழுந்ததோடு, கார்களும் நொறுங்கின.
இந்தப் பேரிடரை அடுத்து, மக்களுக்கு உதவ மீட்புக் குழுவினர் விரைந்திருக்கின்றனர்.