Latestமலேசியா

SST வரி உயர்வு ; Shopee, Lazada, Tik Tik Shop கூடுதல் கட்டணம் வசூலிக்கத் தொடங்கியுள்ளன

ஷா ஆலாம், மார்ச் 1 – இரு பிரபல ஆன்லைன் வர்த்தக தளங்களான சோப்பியும் (Shopee), லசாடாவும் (Lazada), SST – விற்பனை மற்றும் சேவை வரி உயர்வுக்கு ஏற்ப பயனீட்டாளர்களுக்கு, பொருட்களை வாங்குவதற்கான கூடுதல் கட்டணங்களை இன்று அறிமுகப்படுத்த தொடங்கியுள்ளன.

Shopee விற்பனை தளத்தில், அந்த கூடுதல் கட்டணம் “SST விநியோக கட்டணம்” என குறிப்பிடப்படுகிறது.

மொத்த ஷிப்பிங் செலவில், தள்ளுபடியை கழித்த பிறகு வரும் கட்டணத்திலிருந்து அந்த SST வரி வசூலிக்கப்படுமென Shopee கூறியுள்ளது.

Shopee விற்பனை தளத்தில் அதுபோன்ற கட்டணம் விதிக்கப்படுவது புதிதாகும். நேற்று வரையில் அப்படி ஒரு கட்டணம் இல்லை.

இவ்வேளையில், லசாடாவும் (Lazada) இன்று தொடங்கி எட்டு விழுக்காடு SST வரியை நடைமுறைப்படுத்தியுள்ளது.

2024 வரவுச் செலவுத் திட்டத்தை தாக்கல் செய்த போது அரசாங்கம் அறிவித்ததை போல, அந்த SST வரி ஆறு விழுக்காட்டிலிருந்து எட்டு விழுக்காடாக உயர்த்தப்பட்டுள்ளது.

பரிவர்த்தனை கட்டணம், லாசாடா பயன்பாட்டு கமிஷன் கட்டணம் மற்றும் விற்பனையாளர்களின் விளம்பர நடவடிக்கைகளையும் அந்த வரி உள்ளடக்கி இருக்குமென Lazada கூறியுள்ளது.

Shopee, Ladaza தவிர்ந்து Tik Tok ஷோப்பும் அதே கட்டணத்தை செயல்படுத்துவதாக அறிவித்துள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!