லண்டன்,பிப் 14 – தங்களது பிரஜைகளில் சிலரை தலிபான்கள் தடுத்து வைத்திருப்பதாக பிரிட்டன் குற்றஞ்சாட்டியுள்ளது. ஏற்கனவே இந்த விவகாரம் குறித்து தலிபான்களிடம் தெரிவித்துள்ளதாகவும் பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சு வெளியிட்ட அறிக்கையொன்றில் தெரிவித்தது. வெளிநாடுகளைச் சேர்ந்த இரு பத்திரிகையாளர்களை விடுதலை செய்துள்ளதாக தலிபான் அரசாங்கம் அறிவித்ததைத் தொடர்ந்து அதற்கு பதில் தெரிவிக்கும் வகையில் பிரிட்டிஷ் அரசாங்கம் இதனை தெரிவித்தது. ஆப்கானிஸ்தானில் பிரிட்டிஷ் மக்களில் அறுவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக மேற்கத்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
Related Articles
Check Also
Close
-
சுங்கை பூலோ சிறையில் கைதிகள் நெரிசல்5 hours ago