
கோலாலம்பூர், ஏப் 20 – ஒற்றுமை அரசாங்கத்தின் பிரதமராக Datuk Sri Anwar Ibrahim நியமிக்கப்படுவதற்கு முன்பாக சரவாக்கின் கூட்டணி கட்சி, GPS வேறெந்த கூட்டணி கட்சிகளோடும் பேச்சுவார்த்தை ஏதும் செய்யவில்லை என துணைப் பிரதமர் Datuk Seri Fadhilah Yusof தெரிவித்துள்ளார்.
23 இடங்களை கொண்டுள்ள GPS, முதலில் தமது பிரதமர் தேர்வாக Tan Sri Muhyiddin Yasin-னுக்கு ஆதரவு தெரிவித்திருந்தது.
ஆனால் Muhyiddin-னுக்கு ஆதரவு அளித்த தேசிய முன்னணியின் சில நாடாளுமன்ற உறுப்பினர்களின் நடவடிக்கை கட்சி தாவல் சட்டத்துக்கு எதிரானது எனவும் அதனால் அது செல்லாது எனவும் தேசிய முன்னணியின் தலைவர் முடிவு செய்ததால் நிலைமை மாறியது.
அச்சமயத்தில் Muhyiddin-க்கு 115 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இருந்தது. அதன் பின்னர் நாங்கள் பிரதமர் யாரென முடிவு செய்வதை மாமன்னர் கையில் விட்டு விட்டதாகவும் நாட்டின் அரசியல் நிலைத்தன்மை கருதி அவர் சொல்கின்ற வேட்பாளருக்கு ஆதரவு அளிக்க GPS முடிவு செய்ததாகவும் Fadhilah விளக்கியுள்ளார்.