Latestமலேசியா

தீபகற்ப மலேசிய பகுதிகளுக்கு சட்டவிரோத தொழிலாளர்களை; விநியோகித்துவந்த முக்கிய நபர் கைது

அலோஸ்டார், பிப் 21 – தீபகற்ப மலேசியாவின் வட பகுதிகளுக்கு சட்டவிரோத தொழிலாளர்களை விநியோகித்துவந்த முக்கிய நபர் கைது செய்யப்பட்டார். அகதிகளுக்கான ஐ.நா ஆணையகத்தின் கார்டு வைத்திருந்த அந்த 53 வயது சந்தேகப் பேர்வழி சுங்கைப்பட்டாணியில் கைது செய்யப்பட்டதாகவும் கடந்த ஆண்டு மத்தியிலிருந்து அந்த நபர் தீவிரமாக செயல்பட்டு வந்துள்ளதாக கெடா குடிநுழைவுத்துறையின் இயக்குனர் Ridzzuan Zain தெரிவித்தார். கடந்த 35 ஆண்டுகாலமாக மலேசியாவில் வசித்துவரும் அந்த நபர் மலாய் மொழியில் சிறப்பாக பேசும் ஆற்றலையும் கொண்டிருந்தததாக அவர் கூறினார். நேற்று சுங்கைப்பட்டாணியில் இரண்டு இடங்களில் நடத்தப்பட்ட சோதனையின்போது 32 இதர மியன்மார் பிரஜைகளுடன் அந்த முக்கிய சந்தேகப் பேர்வழியின் 55 வயது மனைவி, மற்றும் அவர்களது 14 மாத குழந்தையும் கைது செய்யப்பட்டதாக Ridzzuan கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!