
லீமா, செப் 13 – விளையாடிக் கொண்டிருந்தபோது எட்டு ஊசிகளை விழுங்கிய 2 வயது ஆண் குழந்தையை மருத்துவர்கள் காப்பாற்றினர். பெருவின் கிழக்குப் பகுதியில் அந்த சம்பவம் நிகழ்ந்தது.
அறுவை சிகிச்சையின் மூலம் அந்த குழந்தை காப்பாற்றப்பட்டது. பண்ணையில் வளர்க்கப்படும் பிராணிகளுக்குச் செலுத்துவதற்காக தடுப்பூசிகளை அக்குழந்தையின் தாயார் வேலை செய்யும் இடத்தில் வைத்திருந்தபோது அக்குழந்தை விழுங்கியதாக கூறப்பட்டது.
அந்த குழந்தையின் வயிற்றில் மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சை மூலம் அந்த ஊசிகள் அகற்றப்பட்டன, பெரு தலைநகர் லீமாவிலிருந்து 622 கிலோமீட்டர் தொலைவில் (தாராடோபோ) Taratapoo விவசாய பகுதியில் அந்த குழந்தையும் அதன் தாயும் வசித்து வந்தனர். அறுவைச் சிகிச்சைக்குப் பின் அந்த குழந்தை தற்போது நலமுடன் இருப்பதாக அறிவிக்கப்பட்டது.