Latestமலேசியா

எட்டு மணி நேரத்திற்கு வாகனத்தில் விட்டுச் செல்லப்பட்ட குழந்தை பரிதாபமாக மரணம்

பெட்டாலிங் ஜெயா, நவம்பர் 9 – தலைநகர், அரா டமான்சாராவில், எட்டு மணி நேரமாக, வாகனத்தில் விட்டுச் செல்லப்பட்ட இரண்டு வயது பெண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.

பராமரிப்பு மையத்தில் குழந்தையை விட்டு விட்டதாக எண்ணி, அதன் தாய் வாகனத்தை பூட்டி சென்றதை தொடர்ந்து அந்த விபரீதம் நிகழ்ந்தது.

அரா டமான்சாராவிலுள்ள, வீடொன்றில், குழந்தை சுயநினைவின்றி கிடப்பதாக, நேற்று மாலை மணி 3.40 வாக்கில் போலீசாருக்கு தகவல் வழங்கப்பட்டதாக, பெட்டாலிங் ஜெயா போலீஸ் தலைவர் அசிஸ்டன் கமிஸ்னர் முஹமட் பாக்ருடின் அப்துல் ஹமிட் தெரிவித்தாத்.

நேற்று காலை மணி ஏழு வாக்கில், தனது இரு பிள்ளைகளை பள்ளியில் விட்ட பின்னர், உயிரிழந்த குழந்தையை பராமரிப்பு மையத்தில் விடுவதற்காக 30 வயதான அப்பெண் எண்ணியுள்ளார்.

எனினும், பராமரிப்பு மையத்தை சென்றடைந்ததும், கைப்பேசி வாயிலாக வியாபார நடவடிக்கைகளில் கவனம் செலுத்திய அப்பெண், குழந்தையை பராமரிப்பு மையத்தில் விடவில்லை என்பதை மறந்து வீடு திரும்பியதாக கூறப்படுகிறது.

பின்னர், குழந்தை வாகனத்தில் சுயநினைவு இன்றி கிடப்பதை கண்ட அப்பெண், முதலுதவி வழங்க முயன்றதோடு, உடனடியாக மருத்துவமனைக்கு அவசர அழைப்பும் செய்துள்ளார்.

சிகிச்சைக்காக சுங்கை பூலோ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அக்குழந்தை பிறந்து இறந்து விட்டதை மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!